உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விருதுநகர், சிவகங்கை போன்று ராமநாதபுரத்தில் கூட்டுறவு வேளாண் கூட்டமைப்பு வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர், சிவகங்கை போன்று ராமநாதபுரத்தில் கூட்டுறவு வேளாண் கூட்டமைப்பு வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம்: விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ளது போல ராமநாதபுரத்தில் கூட்டுறவு வேளாண் கூட்டமைப்பு அமைத்து குறைந்த விலையில் உரம், பூச்சி மருந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருட்கள் கூட்டமைப்பு (TANFED) மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள், பூச்சி கொல்லி மருந்துகள் வழங்கப்படுகிறது.மேலும் விளைப்பொருட்களை சேமித்து, விநியோகித்து சந்தைப்படுத்தும் பணியை மேற்கொள்கிறது. இந்த கூட்டமைப்பு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளது. ராமநாதபுரத்தில் இல்லை. இதனால் சிவகங்கைக்கு செல்ல வேண்டியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிப்பு குழு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல், 1 லட்சம் ஏக்கரில் பருத்தி, 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், இதே போல சிறுதானியப் பயறு வகைகள் சாகுபடி நடக்கிறது.இதற்கான உரம், பூச்சி மருந்து, வேளாண் இடுப்பொருட்கள் ஆண்டு தோறும் சிவகங்கையில் உள்ள கூட்டுறவு வேளாண் பொருட்கள் கூட்டமைப்பு பெறும் போது காலதாமதம் ஏற்படுகிறது.எனவே விருதுநகர், சிவகங்கையை விட அதிகளவில் விவசாயம் நடைபெறும் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருட்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை