வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல்
ராமநாதபுரம்: மண்டபம் வட்டார வேளாண்துறை அட்மா திட்டத்தில் குயவன்குடி யில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) பாஸ்கரமணியன் தலைமை வகித்தார். அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி உதவி இயக்குநர் செல்வம் வரவேற்றார். அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராம்குமார், பாலாஜி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். நெல் சாகுபடியில் சந்தேங்கள், மகசூல் அதிகரிக்க உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை குறித்த கேள்விகளுக்கு விஞ் ஞானிகள் பதிலளித்தனர். வேளாண் உதவி இயக்குநர்கள் நாக ராஜன், அம்பேத்குமார் மற்றும் அலுவலர்கள் சீதாலட்சுமி, மோனிஷா, ேஹமலதா, அட்மா திட்ட மேலாளர் பானுமதி, உதவி மேலாளர் சோனியா, விவசாயிகள் பங்கேற்றனர்.