உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து நவ.14ல் விவசாயிகள் உண்ணாவிரதம்

பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து நவ.14ல் விவசாயிகள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து நவ.,14ல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென்கலுங்கு அருகே உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் நிறுவன தலைவர் பாக்கியநாதன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024 நவ., டிச., 2025 ஜனவரியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் மீண்டும் முளைத்தது. நீரில் மூழ்கி மிளகாய் அழுகியதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. மழை நிவாரணம் வழங்க கணக்கெடுத்து ரூ.25 கோடி வழங்க நிதித்துறை பரிசீலனையில் உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். நிவாரணம் கேட்டு ஒப்பாரி போராட்டம், ரயில் மறியலில் கைது, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் புறக்கணிப்பு என பல்வேறு கட்டமாக விவசாயிகள் போராடியும் இதுவரை தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்காமல் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இதனை கண்டித்தும் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.8000 மற்றும் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கையில் 20 இடங்களில் ைஹட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் நெல், 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், 30 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. நெல் சாகுபடியில் தமிழ்நாட்டில் 4ம் இடத்தில் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.,14ல் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை