ஏப்.25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஏப்.,25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 10:30மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் விவசாயிகள், சங்க பிரதிநிகள் தங்களது விவசாயம் சம்பந்தமான கோரிக்கை, குறைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.