மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
3 minutes ago
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
3 minutes ago
டிச.26 ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
5 minutes ago
பிறை அறிவிப்பு
6 minutes ago
மாவட்டத்தில் மானாவாரியாக 3 லட்சம் ஏக்கர் வரை ஆண்டு தோறும்நெல் சாகுபடி நடக்கிறது.வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல்விதைக்கின்றனர். அக்டோபரில் போதிய மழையில்லாதால் சிலஇடங்களில் நெல் விதைகள் முளைக்காமல் நிலத்தை மறு உழவு செய்துமீண்டும் விவசாயிகள் இரண்டாம் முறையாக நெல் விதைத்துள்ளனர். தற்போது மழை பெய்துள்ளதால் நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சிஅடைந்துஉரமிடுதல், களையெடுத்தல் பணிகள் நடக்கிறது.இருப்பினும் இவ்வாண்டுக்குரிய பயிர்கடன் பலருக்கு கிடைக்கவில்லைஎன விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளத்துார் விவசாயி வீரமணி கூறியதாவது: கடன்வழங்குவதில் எவ்வளவு குறைக்க முடிமோ அவ்வளவு குறைத்துள்ளனர். கடந்தாண்டு ரூ.300 கோடிக்கும் மேல் வழங்கினர். ஆனால் தற்போது ரூ.200 கோடி தான் கொடுத்துள்ளனர். இவ்வாண்டு நெல் ஏக்கருக்கு ரூ.33ஆயிரம் மதிப்பீடு அதிகரித்துள்ளதால் ஒருவருக்கு வட்டி இல்லாமல் ரூ.2லட்சம் வரை கடன் வழங்க வேண்டும்.40 சதவீதம் வரைபுதிதாக விவசாயிகளுக்கு கடன் வழங்கலாம். அதையும் தராமல் கூட்டுறவுசங்களில் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். இவ்விஷயத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலையீட்டு புதியவர்கள் உட்படபயிர்கடன் கேட்டு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன்வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், இவ்வாண்டு பயிர் கடன் ரூ.432 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்து அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் பயிர் கடன் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் வரை ரூ.247 கோடி வரைவழங்கப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது குறித்துவிசாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
3 minutes ago
3 minutes ago
5 minutes ago
6 minutes ago