உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவம்பர் வரை பயிர் காப்பீடு : விவசாயிகள் வலியுறுத்தல்

நவம்பர் வரை பயிர் காப்பீடு : விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பயிர் காப்பீடு செய்ய நவ., மாத கடைசி வரை நீட்டிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட குழு முத்துராமு கூறினார். அவர் கூறியதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக., முதல் செப்.,வரை விதைப்பு பணிகள் நடந்தது. மழை பெய்யாததால் பயிர்கள் முளைக்கவில்லை. வருவாய்த்துறையினர் அடங்கல் சான்றும் வழங்காமல் இருந்தனர். இது குறித்து அக்., மாதம் ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அடங்கல் சான்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தற்போது காப்பீடு பதிவு செய்யும் போது ஓ.டி.பி. எண் கட்டாயமாக்கபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பதிவு மேற்கொள்ள கூடுதல் கால விரயம் ஏற்படுகிறது. வி.ஏ.ஓ., க்களுக்கு பி.எல்.ஓ. கூடுதல் பணியாக வழங்கபட்டுள்ளதால் உடனுக்குடன் அடங்கல் கிடைக்கவில்லை. எனவே நவ., 15 கடைசிநாள் என்பதை நீட்டிப்பு செய்து நவ.,30 வரை காப்பீடு செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களிலும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ