| ADDED : பிப் 17, 2024 10:51 PM
பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு, வெள்ளையன் வலசை, பத்திராதரவை, சக்திபு ரம், நயினாமரைக்கான், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடக்கிறது. கடந்த வாரம் அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் எள் விதைப்பதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் டிராக்டரில் நன்கு உழவு செய்யப்பட்டு அவற்றில் எள் விதைப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். விவசாயிகள் கூறியதாவது:நடப்பு ஆண்டில் பெய்த பருவமழை கை கொடுத்துள்ளது. ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் உள்ள நிலையில் எள் விவசாயத்திற்கு உரிய மண் அமைப்பு இப்பகுதியில் உள்ளதால் நெல் விவசாயத்திற்கு பிறகு எள் சாகுபடி செய்கின்றனர். இதனால் ஆண்டிற்கு நெல் மற்றும் எள் இரு போகம் வயல்வெளியில் பயன்பாடு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு உழவு செய்ய டிராக்டருக்கு ரூ.800 வாடகையாக கொடுக்கப்படுகிறது என்றனர்.