உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பந்தல் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

பந்தல் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருப்புல்லாணி: பருவ மழையை பயன்படுத்தி வீட்டு தோட்டங்கள் மற்றும் வயல்களில் அதிகளவு பந்தல் அமைத்து கொடி தோட்டங்கள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பசுந்தாள் உரம் மற்றும் கால்நடைகளின் கழிவுகளை பயன்படுத்தி வேப்பம் புண்ணாக்கு இவற்றின் கலவைகளுடன் கூடிய இயற்கை உரங்களை நிலத்தில் இட்டு அவற்றின் மூலம் காய்கறிகளை விளைவிப்பதில் விவசாயிகள் முனைப்புடன் உள்ளனர். திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையை கணக்கிட்டு ஈரப்பதத்தில் இருக்கும் போதே வீடுகளில் மற்றும் வயல்களில் நீண்ட பந்தல் அமைத்து அவற்றில் புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட கொடி வகைகளுடன் கூடிய செடிகளை விதைத்து வருகின்றனர். திருப்புல்லாணி தோட்டக்கலைத் துறை சார்பில் வழங்கக்கூடிய காய்கறி தொகுப்பு மானிய விலையில் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பயன்படுத்தியும் கடந்த ஆண்டு தங்களது நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி விதைகளை முறையாக சேமித்து வைத்து அவற்றின் மூலமாகவும் காய்கறி தோட்டங்கள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !