ராமநாதபுரத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தில் 20 இடங்களில் கிணறுகள் அமைக்க கூடாது என விவசாய சங்கத்தினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் அர்ஜீனன் முன்னிலையில் விவசாயிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயத்தை பாதிக்கும் ைஹட்ரோ கார்பன் எடுக்க 20 இடங்களில் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வைகை பாசன விவசாயிகள் சங்கம் ராமநாதபுரம், சிவகங்கை மண்டல பொதுச் செயலாளர் மதுரைவீரன், மாவட்ட துணை தலைவர் விஜயன் உள்ளிட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த தமிழர் அதிகாரம் அமைப்பின் நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் ைஹட்ரோ கார்பன் எடுக்க கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். குறிப்பாக ஒன்.என். ஜி.சி.,,க்கு வழங்கிய அனுமதியை நிரந்தரமாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்.