உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய்க்கு காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

மிளகாய்க்கு காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம், -கடந்த 2020-21 ல் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை, 2022-23 வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட காவிரி வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையில் மிளகாய் செடியுடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், கடந்த 2020-21ல் மிளகாய் அழிவிற்கு மத்திய, மாநில அரசு ரூ.8 கோடி வரை வழங்கியுள்ளது.அதனை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 2022-23ல் மழை வெள்ளத்தால் பாதித்த மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை