பண்ணை குட்டையில் மழை நீரை தேக்கும் விவசாயிகள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீரை விவசாயிகள் பண்ணை குட்டைகளில் சேமித்து வருகின்றனர்.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். தற்போது முதுகுளத்துார் பகுதியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் விவசாய நிலத்தில் அதிகமாக தண்ணீர் தேங்குகிறது. முதுகுளத்துார் அருகே காக்கூர், மு.சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அமைத்திருந்த பண்ணை குட்டைகளில் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாயத்திற்கு தண்ணீரில்லாத நேரங்களில் பண்ணை குட்டையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மோட்டர் வைத்து பாய்ச்சுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினர்.