மேலும் செய்திகள்
நெல் விதைப்பு பணி துவக்கம்
15-Sep-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பருவமழை போக்கு காட்டுவதால் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர். ஆர்.எஸ் மங்கலம் வட்டாரம், ஆனந்துார், ஆயங்குடி, திருத்தேர்வளை, சாத்தனுார், கூடலுார், நத்தக்கோட்டை, சனவேலி, சேத்திடல், சீனாங்குடி, எட்டியதிடல், வரவணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பருவ மழையை எதிர்பார்த்து விளை நிலங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் மேக கூட்டங்கள் மழை பெய்வது போல் கூடி லேசான மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு நெல் விதைப்பு செய்த விவசாயிகள் தினம் தினம் பருவமழையை எதிர்பார்த்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். விளை நிலங்களில் விதைப்பு செய்யப்பட்ட விதை நெல் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு முளைப்புத்திறனை இழந்து விடும் என்பதால் குறிப்பிட்ட நாட்களுக்குள் நெல் முளைப்புக்கு ஏற்ற மழை தேவை என்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் போதிய பருவமழை இல்லை என்றால் 15 நாட்களுக்கு முன்பு விதைப்பு செய்த நெல் வயல்களை உழவு செய்து மீண்டும் நெல் விதைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் விதை நெல், உழவு கூலி என ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயி களுக்கு ஏற்படும். விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து கவலையில் ஆழ்த்தியுள்ளது.
15-Sep-2025