பருவமழை இன்றி விவசாயிகள் கவலை
தேவிபட்டினம் : தேவிபட்டினத்தில் நெல் முளைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சம்பை, நாரணமங்கலம், கழனிக்குடி, இலந்தை கூட்டம், முத்துச்சாமி புரம், சிங்கனேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்யப்பட்ட பின்பு பெய்த சாரல் மழையால், சில வயல்களில் மட்டுமே நெல் பயிர்கள் முளைத்துள்ளன. பெரும்பாலான வயல்களில் மழையால் போதிய ஈரப்பதம் ஏற்படாததன் காரணமாக நெல் பயிர்கள் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முளைத்துள்ள வயல்களிலும் வறட்சியின் காரணமாக நெற்பயிர்கள் வெயில் நேரத்தில் கருகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.