பருத்தி செடிகளை காப்பாற்ற சேலைகளால் வேலி அமைப்பு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் பருத்தி செடிகளை காப்பாற்ற சேலைகளால் விவசாயிகள் வேலி அமைத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நெல் அறுவடைக்கு பின்பு, அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.குறிப்பாக, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, பெருமாள் மடை, அண்ணாமலை நகர், மங்கலம், இருதயபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், கண்மாய் பாசனத்தை நம்பி அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளை கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்கும் இடமாக விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயல்களை சுற்றிலும், சேலையால் வேலி அமைத்துள்ளனர். விவசாயிகள் அமைத்துள்ள சேலை வேலி அவ்வழியாக செல்லும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.