உரமிடும் பணிகள் தீவிரம்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் உரமிடும் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறுகையில், மழை நீர் தேங்கியுள்ளதால் வயல்களில் ஈரப்பதத்தை பயன்படுத்தி நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு உரமிடுகிறோம். களை எடுக்கும் பணிகளும் நடக்கிறது. தற்போது பெய்த மழையால் பயிர்கள் வளர்ச்சியடைந்து வருகிறது. 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்தால் நல்லது என்றனர்.