தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
சாயல்குடி:சாயல்குடி தீயணைப்பு நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. சாயல்குடி தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:பொதுவாக விசேஷ காலங்களில் பட்டாசு வெடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அவற்றை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும் வைக்கோல் போர் இருக்கக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறுவர்களிடம் தீப்பெட்டி உள்ளிட்டவைகளை கொடுக்கக் கூடாது. பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். சாலையோரங்களில் தீ வைப்பது தடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றனர்.