உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரியில் தீ தடுப்பு பேரிடர் மீட்பு ஒத்திகை

கல்லுாரியில் தீ தடுப்பு பேரிடர் மீட்பு ஒத்திகை

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அருள்ராஜ் தலைமை வகித்தார். முதல்வர் குருசாமி முன்னிலை வகித்தார். பேரிடர் காலங்களில் எவ்வாறு மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தீப்பற்றி எரிந்தால் பாதுகாப்பாக அணைப்பது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முதலுதவி மேற் கொள்ளுதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கையாளுதல் குறித்து கல்லுாரி மாணவி களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி