உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு மீன் அமிலம் தயாரிப்பு பயிற்சி

விவசாயிகளுக்கு மீன் அமிலம் தயாரிப்பு பயிற்சி

திருவாடானை; திருவாடானை அருகே துத்தாக்குடியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் விவசாயம் செய்வது குறித்து விளக்கங்களும் இதர வேளாண் திட்டங்களும், மீன் அமிலம் அமினோ அமிலம் தயாரித்தல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மீன் அமிலம் தயாரிக்கும் செயல்முறை, ஒரு கிலோ மீன் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் குடுவை அல்லது கண்ணாடி குடுவையில் காற்று புகாதவாறு 30 நாட்களுக்கு வைத்து மீன் கழிவுகளில் உள்ள புரதச்சத்து நொதித்தலின் மூலம் அமினோ அமிலமாக மாற்றப்பட்டு மீன் அமிலம் கிடைக்கிறது.இதனை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். அமினோ அமிலம் தெளிப்பதன் மூலம் பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து கிடைப்பதால் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.மேலும் மண்ணில் நுண்ணுயிரி பெருக்கத்திற்கு வழிவகை செய்கிறது என வேளாண் துறை அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !