உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி விரதத்தால் மீன் விலை வீழ்ச்சி; பாம்பன் மீனவர்கள் மீன்பிடிப்பு கட்

புரட்டாசி விரதத்தால் மீன் விலை வீழ்ச்சி; பாம்பன் மீனவர்கள் மீன்பிடிப்பு கட்

ராமேஸ்வரம்; புரட்டாசி விரதம் துவங்கியதால் மீன் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். செப்.,22 முதல் நவராத்திரி விழா துவங்கியதால் நாடு முழுவதும் ஹிந்துக்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் ஹிந்துக்கள் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவுக்கு மாறினர். இதனால் கேரளா, கோவை, பொள்ளாச்சி மார்க்கெட்டில் மீனுக்கு மவுசு இல்லாமல் போனது. இதனால் ராமேஸ் வரம், பாம்பனில் மீன்கள் விலை கிலோவுக்கு 50 சதவீதம் விலை குறைந்தது. பாம்பனில் ஒரு கிலோ வெளமீன், நகரை மீன், பாரை மீன், முண்டக்கண்ணி மீன்கள் உள்ளிட்ட எல்லா ரக மீன்களுக்கும் கிலோ ரூ.60 முதல் 120 வரை விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் மீனவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நேற்று பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 95 விசைப் படகுகளையும் கரையில் நிறுத்தி வைத்து வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ