உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் விழுந்த மீனவர் பலி

கடலில் விழுந்த மீனவர் பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் படகுகள் நிறுத்தும் பாலத்தில் அமர்ந்தபடி துாண்டிலில் மீன்பிடித்த மீனவர் கடலில் விழுந்து உயிரிழந்தார்.ராமேஸ்வரம் எம்.ஆர்.டி., நகரை சேர்ந்தவர் மீனவர் சைவத்துரை 42. இவர் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் உள்ள படகுகள் நிறுத்தும் பாலத்தில் அமர்ந்தபடி துாண்டிலில் மீன்பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக சைவத்துரை கடலில் விழுந்தார்.அலையின் வேகத்தில் சிக்கி படகில் மோதியதில் மயங்கி கடலுக்குள் மூழ்கினார்.சிறிது நேரத்திற்கு பின் தகவலறிந்த உறவினர்கள் கடலில் வெகுநேரம் தேடி பார்த்தும் சைவத்துரை உடல் கிடைக்கவில்லை. நேற்று காலை ராமேஸ்வரம் அந்தோணியார் கோயில் அருகில் கடற்கரையில் மீனவர் உடல் ஒதுங்கியது. மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ