கடலில் மூழ்கி மீனவர் பலி: வழக்கு மாற்றம்
தொண்டி: கடலில் மூழ்கி இறந்த மீனவர் வழக்கு மேல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யப்பட்டது. தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகு கடற்கரையிலிருந்து 50 மீட்டர் துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. நவ.25ல் பலத்த காற்று வீசியதால் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18 ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர். நங்கூரம் போட்டுவிட்டு நீந்தி கரைக்கு திரும்பிய போது தொண்டீஸ்வரனை சுழல் இழுத்துச் சென்றதால் அவர் பலியானார். தொண்டி மரைன் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மேல் விசாரணைக்காக தொண்டி போலீஸ்ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யப்பட்டது.