உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி கஞ்சி தொட்டி திறக்க மீனவர்கள் முடிவு

மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி கஞ்சி தொட்டி திறக்க மீனவர்கள் முடிவு

ராமநாதபுரம்; 'தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் 60 நாட்கள் அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கப்படும்,' என, ராமநாதபுரத்தில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.கூட்டமைப்பின் தலைவர் சின்னத்தம்பி கூறியதாவது: மீன்கள் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்., 15 -ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலமாக அரசு அறிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசு ஒரு குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.8000 வழங்குகிறது.மீன் பிடி தடைக்காலம் துவங்கி ஒரு மாதமாகியும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் முறையாக பதில் தருவதில்லை. மீனவ சங்கங்கள் கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. ஒரு நாள் நிவாரணமாக ரூ.350 வீதம் 60 நாட்களுக்கு ரூ.21 ஆயிரம் வழங்க கோரிக்கை விடுத்தும் அரசு பதிலளிக்கவில்லை. அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிவாரணம் ரூ.8000 ஐ உடனடியாக வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகத்தில் பசியால் வாடும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் மீனவ குடும்பங்களின் பசியை போக்க கஞ்சி தொட்டி திறக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை