கருப்பு பேட்ஜ் அணிந்து மீனவர்கள் உண்ணாவிரதம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 61 பேரையும் 7 படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக., 11 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமரிட், ஏராளமான மீனவர்கள், மீனவப் பெண்கள் பங்கேற்றனர்.