உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த இரண்டாவது மனைவியின் மகன் 5 பேர் கைது

சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த இரண்டாவது மனைவியின் மகன் 5 பேர் கைது

கீழக்கரை: சொத்து தகராறில் கட்டட தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம் பெரிய தச்சூரை சேர்ந்த கண்ணன் மகன் செல்வராஜ் 41. இவர் ஏர்வாடி முத்தரையர் நகரில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்தம்மாள், இரண்டாவது மனைவி அபிராமி.மூன்றாண்டுகளுக்கு முன்பு கட்டட வேலை நிமித்தமாக குடும்பத்தினருடன் ஏர்வாடி முத்தரையர் நகரில் தங்கி கட்டுமான கூலி தொழில் செய்து வந்தார். தந்தை மற்றும் மகன்களுக்கு இடையே சொத்து தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. இது தொடர்பாக ஜூன் 11ல் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு கட்டட தொழிலாளி செல்வராஜ் சென்றுள்ளார். அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு வெளியே செல்வதற்காக வீட்டை பூட்டிக் கொண்டிருந்த செல்வராஜை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பினர். ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கட்டடத் தொழிலாளி செல்வராஜ் முதல் மனைவி முத்தம்மாளின் மகன் மணிகண்டன் 22, மூளையாக செயல்பட்டு செல்வராஜின் இரண்டாவது மனைவியான அபிராமியின் 16 வயது மகன் மூலமாக தந்தையை கொலை செய்வதற்கு துாண்டுகோளாக இருந்துள்ளார். கொலையில் ஈடுபட்ட சிறுவன், அவரது நண்பரான மற்றொரு சிறுவன், சிபிராஜ் 20, மூவரும் சேர்ந்து மீன் வெட்டும் கத்தியால் செல்வராஜின் தலை, முதுகு மற்றும் உடல் பகுதிகளில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது.ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் மற்றும் தனிப்படை போலீசார் கெலையில் தொடர்புடைய 2 சிறுவர்கள், மணிகண்டன் 22, அவருடைய மனைவி சந்தியா 20, ராஜ்குமார் 20, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை