மேலும் செய்திகள்
இளைஞர்கள் ஒயிலாட்டம்
24-Jul-2025
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி அடைக்கல அன்னை சர்ச் விண்ணேற்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பங்கு பாதிரியார் தினேஷ் திருப்பலி நிறைவேற்றி கொடி மரத்தில் விழா கொடியேற்றி துவக்கி வைத்தார். விழாவின் தொடர்ச்சியாக நற்கருணை ஆராதனையும், திருஜெபமாலையும் நடக்கிறது. ஆக.,14ல் இரவு முக்கிய விழாவான தேர் பவனி விழா நடக்கிறது. அதை தொடர்ந்து மறுநாள் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு மாலையில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.
24-Jul-2025