மேலும் செய்திகள்
இனி, யாருடைய கொடியும் பறக்காது!
28-Mar-2025
தேவிபட்டினம்: தேவிபட்டினம் பகுதியில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் உள்ளன.தமிழகத்தில், பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை, அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான கிராமங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் உள்ளன.குறிப்பாக, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
28-Mar-2025