கவுரி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு 37ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.கோயிலில் தெலுங்கு விஸ்வ பிராமண மகா சபையினரால் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டது.தொடர்ந்து காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.இரவு கவுரி அம்மன் அன்ன வாகனத்தில் அலங்காரமாகி பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.