உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்னமும் பதவியில் இருப்பதாகவே மக்கள் மத்தியில் வலம் வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள்

இன்னமும் பதவியில் இருப்பதாகவே மக்கள் மத்தியில் வலம் வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள்

திருப்புல்லாணி: மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, போகலுார், திருப்புல்லாணி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவி காலம் முடிந்த பின்னரும் தங்களது சொந்த வாகனத்தில் அதே பெயர் பலகையுடன் வலம் வருவது தொடர்கிறது. தான் இன்னமும் பதவியில் இருப்பதாகவே மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.உள்ளாட்சிகளில் 5 ஆண்டு காலம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான வாகனங்களின் முகப்பு பகுதியில் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் பெயர் பலகையுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.இதை பார்க்கும் பொழுது இன்னமும் பதவியில் இருப்பதாகவே மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.எனவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் சட்ட விதிகளின்படி முன்னாள் என்ற பெயர் பலகையுடன் உலா வருவதில் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் தற்போது பதவியில் இருப்பதைப் போன்று கார்களில் வலம் வரும் போக்கு பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.இதற்கு உள்ளாட்சித் துறை நிர்வாகம் உரிய வழிகாட்டுதலையும் அறிவுரையும் வழங்க வேண்டும், அதற்கு மாவட்டநிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை