மேலும் செய்திகள்
அப்துல்கலாம் நினைவு தினம்
28-Jul-2025
ராமேஸ்வரம் : -முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் யொட்டி அவரது நினைவிடத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மாணவர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 10ம் ஆண்டு நினைவு தினம் யொட்டி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு எனுமிடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று காலை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், கலெக்டர் ஜிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்துல்கலாம் உறவினர்கள் ஜெயினுலாபுதீன், நசீமா மரைக்காயர், சேக் சலீம், சேக் தாவூத், ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் துவா பிரார்த்தனை செய்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்தில் பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கீழக்கரை பள்ளமோர்குளத்தில் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் விக்னேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, ஆசிரியர் மலர்விழி, பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கலாமின் வாழ்க்கை வரலாறு, அவர் ஆற்றிய சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் பகிரப்பட்டது.
28-Jul-2025