மேலும் செய்திகள்
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக்கொலை
06-Jul-2025
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையார்கூட்டத்தில் மீன் வியாபாரி கொலை வழக்கில், 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பேரையூர் போலீசார் கைது செய்தனர். உடையார்கூட்டத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ஜபருல்லா 45, மனைவி கிருஷ்ணவேணி என்ற பாத்திமாகனி. இருவர்களுக்கு அதே ஊரை சேர்ந்த அபிமன்யு என்பவர் இடையே சிறுவர்கள் தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனை மனதில் வைத்து கொண்டு அபிமன்யு மீது கிருஷ்ணவேணி சாணியை கரைத்து ஊற்றினார். ஜூலை 31ல் ஜபருல்லாவை 4 பேர் வெட்டி கொலை செய்தனர். பேரையூர் போலீசார் விசாரணையில் தந்தையை அசிங்கப்படுத்தியதற்காக அபிமன்யுவின் 17 வயது மகன், நண்பர்கள் உலகநடை கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் 18, மருதங்கநல்லுாரை சேர்ந்த லிங்கேஸ்வரபாண்டியன் 18, உடையைசேர்வாக்காரன் பட்டியை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் கொலை செய்துதது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்தனர்.
06-Jul-2025