உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

பரமக்குடி: கைத்தறித்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து ஜீவா நகரில் உள்ள மகாலட்சுமி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதி கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தலைமை வகித்து முகாமை துவக்கினார். அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் முகாமில் பங்கேற்று கண் புரை, கண் நீர் அழுத்தம், விழித்திரை பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் ஜீவா நகர், மகாலட்சுமி நகர், காந்திஜி காலனி உள்ளிட்ட பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன் பெற்றனர்.நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள், அலுவலர்கள், உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர். வாசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் கண் பரிசோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ