இலவச மேஜை வழங்கல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஜல்லிமலை தெருவில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு போதுமான சேர், மேஜை வசதி இல்லாததால் பணிபுரியும் நர்ஸ், ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். இதையறிந்த ராமேஸ்வரம் கம்பன் கழக பொருளாளர் சமூக ஆர்வலரான ராமு ஏற்பாட்டில் இரு புதிய மேஜைகளை வாங்கினார். இதனை நேற்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ராமுவின் சமூக பணியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.