உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய பாலத்தில் இன்று சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் இன்று சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்,:இன்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ., வேகத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் நடக்கிறது.பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தும் பணியும் முடிந்தது. இந்நிலையில் சரக்கு ரயில் பெட்டி சோதனை ஓட்டம், துாக்கு பாலம் திறந்து மூடும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1:00 முதல் 2:30 மணி வரை மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு இன்ஜின் 12 சரக்கு பெட்டிகளுடன் 90 கி.மீ., வேகத்தில் பாம்பன்புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வரை ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.இச்சோதனையின் போது பொதுமக்கள், வாகனங்கள், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ