விநாயகர் சதுர்த்தி திருவிழா
திருவாடானை, : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. திருவாடானை கைலாச விநயாகர் வெள்ளி கவசத்தில் அலங்கரிக்கபட்டார். பாரதிநகர் கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இரவில் கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.தொண்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. சின்னத்தொண்டியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று தொண்டி கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.