மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலம்
28-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று (ஆக.,29) மதியம் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் நகர், புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரஷ்திடை செய்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். அவற்றை இன்று மதியம் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நொச்சியூருணியில் கரைக்க உள்ளனர். இதையடுத்து நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரண்மனை நோக்கி செல்லும் பஸ்கள் சர்ச் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படும். வழிவிடுமுருகன் கோயில், கேணிக்கரை, பேராவூர் நோக்கி செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் மருத்துவமனை ரோடு வழியாக அனுப்பப்படும். கேணிக்கரை, பேராவூர் வழியாக தேவிபட்டினம், திருச்சி செல்லும் பஸ்கள் அனைத்தும் பாரதிநகர், பட்டணம்காத்தான் வழியாக பேராவூர் வழியாக அனுப்பப்படும். பேராவூர், கேணிக்கரை நோக்கி வரும் பஸ்கள் அனைத்தும் பட்டணம்காத்தான் சந்திப்பு செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி சந்திப்பு வழியாக திருப்பி அனுப்பப் படுகிறது. இதுகுறித்து எஸ்.பி., சந்தீஷ் கூறியதாவது: மாவட்டத்தில் 350 விநாயகர் சிலைகள் உள்ளன. 7 ஊர்வலங்கள் நடக்கிறது. நேற்று ராமேஸ்வரம், மண்டபம், பரமக்குடியில் நடந்துள்ளது. 900 போலீசார், 250 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இன்று ராமநாதபுரம், தேவிபட்டினம், சாயல்குடி, ராமேஸ்வரம் டவுன் பகுதிகளில் ஊர் வலம் நடக்கிறது. கடந்த ஆண்டு போல அமைதியாக நடத்த உள்ளோம். தீப்பொரி வரும் பேப்பர் லாஞ்சர் பயன்படுத்தப்பட கூடாது,பட்டாசு வெடிக்க கூடாது, விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். திருப்பி வழங்கமாட்டோம் என்றார்.
28-Aug-2025