உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் 57 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

பரமக்குடியில் 57 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

பரமக்குடி : பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஹிந்து முன்னணி சார்பில் கேசவ பவனத்தில் கமிட்டி கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆதித்தன், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் குமரன் வரவேற்றார். அப்போது பரமக்குடியில் 32ம் ஆண்டு சதுர்த்தி விழாவில் 57 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட உள்ளது. மேலும் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது என்றனர். நகர் பொதுச் செயலாளர்கள் வீரமருது, விஜயகுமார் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை