கமுதக்குடி கால்வாயில் குவியும் குப்பை
பரமக்குடி : - பரமக்குடி அருகே கமுதக்குடி கால்வாயில் கொட்டப்படும் குப்பையால் நீராதாரம் பாதிக்கப்பட்டுமள்ளது.பரமக்குடியில் இருந்து சோமநாதபுரம், பொதுவக்குடி வழியாக கமுதக்குடி ரோடு செல்கிறது. கண்மாய் கரையோரம் ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.இப்பகுதியில் தொடர்ந்து மினி பஸ் போக்குவரத்து, பள்ளி வாகனங்கள், டூவீலர்கள், பள்ளி மாணவர்கள் சைக்கிளில் சென்று வருகின்றனர். இந்நிலையில் கமுதக்குடி கோயில் அருகில் செல்லும் பிரிவு கால்வாயில் குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் வரும் காலங்களில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. கால்வாயில் குப்பையை அகற்றி கமுதக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அள்ளப்படும் குப்பையை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.