வைரவனேந்தலில் குப்பையால் சுகாதாரக்கேடு
பரமக்குடி : பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் வைரவனேந்தல் கிராம ரோட்டோரம் கொட்டி குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.வைரவனேந்தல் தொடங்கி, காமன் கோட்டை, முதலுார் மற்றும் கே.கருங்குளம், மென்னந்தி செல்வதற்கு பிரதான ரோடு உள்ளது. பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.ரோட்டோரங்களில் மழை நீர் கடந்து செல்ல கால்வாய் உள்ள நிலையில், ஊருணி மற்றும் குளங்கள் இருக்கிறது.சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை ரோட்டோரம் கொட்டி குவிக்கப்படுகிறது. மழை நேரங்களில் குப்பை கால்வாய்கள் வழியாக அடித்துச் செல்லப்பட்டு கண்மாய்களில் சேருவதுடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. கிராமப்புற ரோட்டோரங்களில் கழிவு குப்பை கொட்டுவதை தடுக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.