கேட் கீப்பர் சஸ்பெண்ட்
ராமநாதபுரம்: கேட்டை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த கேட் கீப்பர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் சென்ற பயணியர் ரயில், வாலாந்தரை ரயில் நிலையத்தை கடந்து வழுதுார் அருகே வந்த போது, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதை கவனித்த லோகோ பைலட் நாகராஜன், ரயிலை நிறுத்தி கேட் மூடியதை உறுதி செய்தவுடன், ரயிலை இயக்கினார். மதுரை கோட்ட அலுவலகத்தில் லோகோ பைலட் புகார் அளித்தார். கேட் கீப்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்தனர்.