உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கடலுார் கடற்கரைப் பகுதியில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்துள்ளதாக ராமநாதபுரம் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கடற்கரை பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 101 ஜெலட்டின் குச்சிகள், அதை வெடிக்க பயன்படுத்தும் 44 டெட்டனேட்டர்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக புதுக்குடி மீனவர்களிடம் மீன் பிடிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா, அல்லது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை