உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரை ஒதுங்கிய ராட்சத மர தடி

கரை ஒதுங்கிய ராட்சத மர தடி

ராமேஸ்வரம்:தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் நேற்று காலை 20 அடி நீளத்தில் ராட்சத மரத்தடி ஒதுங்கியது. துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறைமுகம் வழியாக சென்னைக்கு சென்ற சரக்கு கப்பல் கடல் கொந்தளிப்பால் நிலை தடுமாறியபோது இந்த மரத்தடி தவறி கடலில் விழுந்திருக்கலாம்.இது விழுந்து ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும். வடகிழக்கு பருவக்காற்றின் வேகத்தில் தனுஷ்கோடி கரையில் ஒதுங்கி இருக்கலாம். விலை உயர்ந்த தேக்கு அல்லது வேங்கை மரத்தடியாக இருந்தால் இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி