மேலும் செய்திகள்
ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம்
28-Jul-2025
திருவடானை; திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ் வரர் கோயில் உள்ளது. ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27ல் தேரோட்டம் நடந்தது. இன்று (ஜூலை 30) திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைந்துள்ள ஆறாம் மண்டபத்தில் சிநேகவல்லி அம்மன் தபசு கோலத்தில் அருள்பாலித்தார். அவருக்கு ஆதிரெத்தினேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சென்று காட்சியளித்தார். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை ஊஞ்சல் உற்ஸவமும், மறுநாள் சுந்தரர் கைலாச காட்சியும் நடைபெறும்.
28-Jul-2025