உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ்சில் தவறவிட்ட நகையை மீண்டும் ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் எஸ். பி., பாராட்டு

பஸ்சில் தவறவிட்ட நகையை மீண்டும் ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் எஸ். பி., பாராட்டு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு பஸ்சில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த டிரைவர் சரவணகுமார், கண்டக்டர் சவுந்தரபாண்டியனை எஸ்.பி.,சந்தீஷ் நேரில் வரவழைத்து பாராட்டினார்.முதுகுளத்துார் அருகே தஞ்சாக்கூர் பகுதியை சேர்ந்த வைஜெயந்தி மாலா 15, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அரசு பஸ்சில் முதுகுளத்துார் வந்துள்ளார். அப்போது மீண்டும் வீட்டிற்கு திரும்ப செல்லும் போது கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் செயினை காணவில்லை என்று தெரிய வந்தது.இதுகுறித்து முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில் வைஜெயந்தி மாலா புகார் அளித்தார். அப்போது அரசு பஸ் படிக்கட்டு அருகே கிடந்த செயினை டிரைவர் சரவணகுமார், கண்டக்டர் சவுந்தரபாண்டியன் எடுத்து எஸ்.ஐ., சக்திவேல் முன்னிலையில் நகையை வைஜெயந்திமாலாவிடம் ஒப்படைத்தனர்.தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் சரவணகுமார், கண்டக்டர் சவுந்தரபாண்டியனை எஸ்.பி., சந்தீஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி