உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அகவிலைப்படி வழங்கக்கோரி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படி வழங்கக்கோரி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஜூலை 1 முதலான 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட நிர்வாகிகள் பாலுசாமி, வேலுச்சாமி, முத்துச்சாமி, கணக்கு கருவூலத்துறை சங்க மாவட்ட செயலாளர் ஜெனிஸ்ட்டர் மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம், சமூக நலத்துறை பணியாளர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உட்பட அனைத்து துறை சங்கத்தினர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை