உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில போட்டிக்கு தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அக்சயா ஸ்ரீ, வர்ஷினி மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாவட்டத்தில் இருந்து பரமக்குடி, முதுகுளத்துார் உட்பட 8 குறு வட்டார அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டியில் 14 வயது பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அக்சயா ஸ்ரீ இரண்டாம் இடமும், 19 வயது பிரிவில் மும்முறை தாண்டுதல் வர்ஷினி இரண்டாம் இடம் பெற்றனர். இதையடுத்து தஞ்சாவூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் மற்றும் மாணவி அக்சயா ஸ்ரீ, வர்ஷினியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தலைமை ஆசிரியர் நவீன் ஆ மாரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை