ஊராட்சிகளில் மார்ச் 23ல் கிராம சபைகூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 23ல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்தை அனுசரித்து அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதன்படி இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 23ல் கிராம சபை கூட்டம் காலை 11:00 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் நடக்கிறது. ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்கக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது பற்றி விவாதித்திட வேண்டும். பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.