உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆட்டோ கவிழ்ந்து விபத்து பேரனுடன் பாட்டி பலி மற்றொரு விபத்தில் மீனவர் சங்க தலைவர் மகன் பலி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து பேரனுடன் பாட்டி பலி மற்றொரு விபத்தில் மீனவர் சங்க தலைவர் மகன் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி காணாமிர்தம். கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சிவா, காணாமிர்தம், மாமியார் ராணி நேற்று காலை 11:00 மணிக்கு ஆட்டோவில் ராமநாதபுரம் மருத்துவமனைக்கு வந்தனர். பெருங்குளம் பகுதியில் வந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் திடீரென ஊருக்குள் திரும்பியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சரக்கு வாகனத்தில் மோதி கவிழ்ந்தது.அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தை தமிழினியன், அவரது பாட்டி ராணி 48, இறந்தனர். காயமடைந்த சிவா, மனைவி காணாமிர்தம்,ஆட்டோ டிரைவர் சுரேந்திரன் மூவரும் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர். பாலத்தில் மோதி பலி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் மீனவர் சங்கத் தலைவர் சகாயம். இவரது மகன் ஜிதன் 22. தனியார் பள்ளி வேன் டிரைவராக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் மண்டபத்தில் இருந்து தங்கச்சிமடம் சென்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற கார் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் டூவீலருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ஜிதன் தலை நசுங்கி உயிரிழந்தார். பாம்பன் போலீசார் கார் டிரைவர் அருண் 25, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை