மேலும் செய்திகள்
மிளகாய் உலர் களம் இன்றி விவசாயிகள் பாதிப்பு
02-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.ஆர்.எஸ்.மங்கலம், சவேரியார் பட்டினம், வல்லமடை, புல்லமடை, ராமநாதமடை, மேலமடை, செங்குடி, வரவணி, எட்டியதிடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி பெரிய கண்மாய் பாசன பகுதிகளான வல்லமடை, மேலமடை, சிலுகவயல், புல்லமடை, ராமநாதமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் வயல்களில், மிளகாய் செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். மிளகாய் வயல்களில் மிளகாய் செடிகளுக்கு அதிகளவில் உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளதாகவும், செலவு குறைவாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
02-Apr-2025