பரமக்குடியில் குருபூஜை விழா
பரமக்குடி: பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஞான யோகானந்த ஆசிரமத்தில் மண்டப சாந்தி, திரிலிங்க சச்சிதானந்த சுவாமிகள் 74ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. விழாவில் கணபதி பூஜையுடன் ஹோமங்கள் நடத்தப்பட்டன. புதிதாக கட்டப்பட்ட ஆசிரம மண்டபத்திற்கு சாந்தி வைபவத்துடன் கும்பநீர் தெளிக்கப்பட்டது. இங்குள்ள குரு மகான் சீதாராம சுவாமிகள், சிஷ்யர்கள் குரு சேஷ சுவாமிகள், சுந்தரராஜ சுவாமிகள் ஆகியோருக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்தனர்.