உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதுக்கரையில் அனுமன் ஜெயந்தி விழா

சேதுக்கரையில் அனுமன் ஜெயந்தி விழா

திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.வேறு எங்கும் இல்லாதபடி இங்கு நேற்று மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் சாலீசா உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர். வெற்றிலை, உளுந்த வடை மாலை சூட்டப்பட்டு வெண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. பூஜைகளை கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை